தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, காதலிக்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவியை
கத்தியால் குத்திய கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற கல்லூரி மாணவர், காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை அந்த மாணவியை நவீன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த மாணவி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த கிராம மக்கள் மாணவியை உடனடியாக மீட்டு, தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, நவீனின் பெற்றோருடன், பள்ளி மாணவியின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கிராமத்தில், பள்ளி மாணவிகள் இளைஞர்களால் தொடர்ந்து கிண்டலுக்கு ஆளாவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாணவியின் குடும்பத்தினர் வலியுறுத்தினார்.