மும்பை : ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமின் பெற்ற காங்., துணைத் தலைவர் ராகுல், வெளியே வந்து ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவதூறு வழக்கில் ஜாமின் :
மகாத்மா காந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ் தான் என பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் குற்றம்சாட்டி பேசினார். இது தொடர்பாக ராகுல் மீது ஆர்எஸ்எஸ் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மகாராஷ்டிரா பிவண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று நேரில் ஆஜரான ராகுல், தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்க போதில்லை எனவும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் கூறி, ஜாமின் பெற்றார். இதனையடுத்து இவ்வழக்கில் விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜாமின் பெற்று வெளியே வந்த ராகுலுக்கு காங்., சார்பில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மீது தாக்கு :
ஏராளமான வாகனங்கள் பின்தொடர சென்ற ராகுல், கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய ராகுல், எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது. எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் இந்தியாவே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி சிரிக்கிறார், பின் அழுகிறார். நாடு முழுவதும் வங்கிகள் வாசலில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். எந்த வங்கி வாசலிலும் நிற்கும் வரிசையில் பணக்காரர்கள் நிற்கவில்லை. ஏழை மக்கள் தான் நிற்கிறார்கள்.
மோடியின் நண்பர்களிடம் தான் கறுப்பு பணம் உள்ளது. ஆனால் அவரது தொழிலதிபர் நண்பர்களிடம் இதுவரை எந்த விசாரணையோ, நடவடிக்கையோ இல்லை. உங்களிடம் உள்ள பணத்தை பறித்து செல்வந்தர்களிடம் கொடுக்க மோடி முயற்சி செய்கிறார். தொழிலதிபர்கள் 15 பேருக்காக ஆட்சி நடத்துகிறார் மோடி. அரசின் இந்த செயல்பாடுகள் குறித்து பார்லி.,யில் குரல் எழுப்ப உள்ளோம் என்றார்.