நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் சிக்கலை தீர்க்க, நாளை வரை, சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டரை நாட்களில், சுங்க வசூலிப்பு நிறுவனங்களுக்கு, 150 கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படும்.
தமிழகத்தில், 5,006 கி.மீ., உட்பட, நாடு முழுவதும், 1.08 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, நகாய் மூலம் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் மூலமும் பராமரிக்கப்படுகின்றன. பராமரிப்பு நிறுவனங்கள், சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும், 43 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 391 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மட்டும், ஐந்து கோடி ரூபாய் உட்பட, நாடு முழுவதும், தினமும், 60 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது.பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்துள்ளதால், சுங்கச்சாவடிகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை நள்ளிரவு வரை, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதற்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தடை விதித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும், கட்டண வசூல் நிறுத்தப்பட்டது. இதன்படி, இரண்டரை நாட்களில், தமிழகத்தில், 12 கோடி ரூபாய் உட்பட, சுங்க வசூலிப்பு நிறுவனங்களுக்கு, 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.