மோஹன்லால்கஞ்ச் (உ.பி): அரசின் அறிவிப்பின்படி தன்னிடமுள்ள இரண்டாயிரம் ரூபாயை மாற்ற வங்கிக்கு சென்ற வயதான பெண்ணிற்கு, வங்கி ஊழியர் ஒருவர் சில்லறையாக 17 கிலோ அளவிற்கு ஒரு ருபாய் நாணயங்களை வழங்கிய கொடுமை நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மோஹன்லால்கஞ்ச்ல் உள்ள மவுரவா சாலையை சேர்ந்தவர் சர்ஜு தேவி இவருடைய மகன் ராம் குமார் யாதவ் புற்று நோயால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள ருபாய் இரண்டாயிரத்தை மாற்றிக் கொள்வதற்காக அவர் மோஹன்லால்கஞ்ச்ல் உள்ள வங்கியொன்றிற்கு சென்றிருக்கிறார்.
அங்கே அவரிடமிருந்த ருபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்ட வங்கி கேஷியரான பெண் ஒருவர், சர்ஜு தேவிக்கு, பதிலுக்கு சில்லறையாக 1 ருபாய் நாணயங்களை வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவி, தனது மகனுடைய சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் அவற்றை ருபாய் நோட்டுகளாக தரும்படி கெஞ்சியுள்ளார்.
ஆனால் அதை காதில் போட்டுக் கொள்ளாத அந்த பெண்மணி, தங்களுக்கு பணம் எந்த அளவில் வருகிறதோ அதையே திருப்பி அளிக்க முடியும் என்று கூறி நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டார்.
கிட்டத்தட்ட 17 கிலோ எடை கொண்ட அந்த நாணய மூட்டைகளை சுமக்க முடியாததால் தன்னுடைய மகனை தேவி உதவிக்கு அழைத்து எடுத்து சென்றுள்ளார்.
யாரும் இந்த சில்லறையை பெற்றுக் கொண்டு பணம் வழங்க முன் வராததால், கையில் பணம் இல்லை. எனவே மகனின் சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கிறேன் என்று தேவி தெரிவித்துள்ளார்.
Summary: Two thousand rupees per 17 kg, the retail bank that issued the coins!