முதுமலை புலிகள் காப்பாக அதிகாரிகளிடம் மதுபோதையில் தகராறில்
ஈடுபட்ட முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் சகோதரர் கோபி சிகாமணி
உள்ளிட்ட 4 பேருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், வனப்பகுதியில் மது அருந்துதல், புகை பிடித்தல், உணவு சமைத்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியில் மது அருந்திய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் சகோதரர் கோபி சிகாமணி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் போதையில் விடுதி ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
மேலும் வனத்துறை அதிகாரிகளையும் தகாத வார்த்தையில் பேசியதால், அவர்களுக்கு அதிகாரிகள் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். அபராத தொகையை செலுத்திய பிறகே அவர்களை அதிகாரிகள் அங்கிருந்து விடுவித்தனர்.