புவனேஸ்வர்: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒடிசாவில் உள்ள ஒரு வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழைய நோட்டுகள் :
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, தென்கனல் மாவட்டத்தில், ஒடிசா கிராமிய வங்கியின் கிளை உள்ளது.மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு பெரிய பெட்டியில், இங்கு வைக்கப்பட்டிருந்தன; இவற்றின் மதிப்பு, 8 கோடி ரூபாய்.
பெட்டியை உடைத்து கொள்ளை :
இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பின், நேற்று காலை வங்கியை திறந்த அதிகாரிகள், அந்த பெட்டி, உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். பெட்டியை சோதனையிட்டபோது, அதில் இருந்த, 1.15 கோடி ரூபாய் கொள்ளைஅடிக்கப்பட்டது தெரியவந்தது.
ஊழியர்களின் உதவியுடன்..?
இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கூறுகையில், 'வங்கியில் பணியாற்றுவோரின் உதவி இன்றி, இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
English Summary:
One crore, old, 500 - 1,000 banknotes, looted from a bank in Orissa, is causing shock.