தருமபுரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முள்ளங்கி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் முள்ளங்கி தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஒரு கிலோ முள்ளங்கி 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் முள்ளங்கி சாகுபடியில் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பால் அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ முள்ளங்கி 1 ரூபாயிலிருந்து 2 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால், பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர் முள்ளங்கி விவசாயிகள்.
English Summary:
Dharmapuri district engendered radish sold at one rupee a kg, farmers are facing huge losses.