மும்பை: பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், விரைவில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் விநியோகம் துவங்கும் என ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
இது தொடர்பாக மும்பையில் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: தென் மாநிலங்களில் வங்கிகளின் வேலைப்பளு 50 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும் என மக்கள் நம்ப துவங்கியுள்ளனர். ரூ.100 நோட்டுகளுக்கான எண்ணிக்கை கட்டுப்பாடு மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்களின் வடிவம் காரணமாகவே ஏடிஎம் இயந்திரங்களில் விரைவில் ரூபாய் நோட்டுக்கள் தீர்ந்து விடுகின்றன. இந்த பிரச்னையை தீர்க்க விரைவில் ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்றார்.