புதுடில்லி: கடந்த 2015ம் ஆண்டில் உயர் ரத்த அழுத்தம் நோயால் 20 கோடி இந்தியர்கள் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் ரத்த அழுத்தம் பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 22.6 கோடி பேருடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
இந்தியா 2வது இடம்:
சர்வதேச அளவில், கடந்த 40 ஆண்டில் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 113 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1975 முதல் 2015 வரை ஒவ்வொரு நாட்டிலும் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் ரத்தக்கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 113 கோடி பேரில், 25.8 கோடி பேர் தெற்காசியாவில் வசிக்கின்றனர். 20 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். 23.5 கோடி பேர் கிழக்கு ஆசியாவில் வசிக்கின்றனர். அவர்களில் 22.6 கோடி பேர் சீனாவில் வசிக்கின்றனர்.
ஆண்கள் அதிகம்:
ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தில் தான் ரத்த அழுத்தம் பாதிப்பு குறைவாக உள்ளது. சர்வதேச அளவில், தென் கொரியா, அமெரிக்கா, கனடாவில் பாதிப்பு குறைவாக உள்ளது. அதிக வருமானம் கொண்ட நாடுகளில் பாதிப்பு குறைந்து வருவதும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இளம் வயதில் குறைந்த ஊட்டச்சத்து உணவுகள் எடுத்தவர்களே, முதுமை வயதில் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டில் 59.7 லட்சம் ஆண்களும், 52.9 லட்சம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் ஒருவர் கூறுகையில், அதிக ரத்த அழுத்தத்திற்கு ஆளானவர்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அச்சுறுத்தலில் இருக்கின்றனர். இதனால் வருடந்தோறும் 75 லட்சம் பேர் சர்வதேச அளவில் மரணமடைகின்றனர்.
English Summary:
The Last of the disease in 2015 and 20 million Indians suffer from high blood pressure, according to the survey. The impact of blood pressure at the international level, India is in second place. China is in first place with 22.6 million people.