புதுடில்லி : மத்திய அரசுக்கு எதிராக பார்லி., முன் எதிர்க்கட்சிகள் நடத்தும் தர்ணா போராட்டத்தில் அதிமுக, திமுக, காங்., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200 எம்.பி.,க்கள் கலந்து கொண்டுள்ளனர்.
200 எம்.பி.,க்கள் :
ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த எதிர்க்கட்சிகள், பார்லி.,யின் இருஅவைகளிலும் அமளியில் ஈடுபட்டு, கூட்டத்தொடரை முடக்கி வந்தன. இந்நிலையில் இன்று பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் மெகா தர்ணா போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன. காங்., துணைத் தலைவர் ராகுல், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கே, நவநீத கிருஷ்ணன், திருச்சி சிவா, கனிமொழி, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 200 எம்.பி.,க்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றன.
பார்லி முடங்கும் அபாயம் :
பார்லி.,யில் இன்றைய கூட்டத்திலும் இரு அவைகளிலும் ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் எழுப்பப்பட உள்ளது. இதனால் இன்றும் பார்லி., நடவடிக்கைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்.,ம் டில்லி ஜந்தர் மந்தரில் இன்று பிற்பகல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தலைமை ஏற்க உள்ளார்.
English Summary:
Barley against the central government., Conducted a sit-in protest in front of the opposition AIADMK, DMK, Cong., Including the parties of the 200 MPs are attending.