புதுடில்லி : ஜம்மு- காஷ்மீர் பகுதியில் சுமார் 200 பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதாக பார்லி.,யில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எல்லையில் 200 பயங்கரவாதிகள் :
ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மட்டும் பாகிஸ்தான் இருந்து இந்தியாவிற்குள் 105 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி காஷ்மீரில் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் செயல்பட்டு வருகின்றனர். எல்லை தாண்டிய ஊடுருவலை தடுக்க மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எல்லையோர பகுதிகள் மற்றும் சர்வதேச எல்லைக் கோட்டு பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஊடுருவ வாய்ப்பு இருக்கும் வழிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கண்காணிப்பு ஏற்பாடுகள் :
எல்லை பாதுகாப்பு தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஊடுருவலை தடுக்க நவீன கருவிகள் எல்லையில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தோ - பாகிஸ்தான் மற்றும் இந்தோ - வங்கதேச எல்லைகளில் இந்த கருவிகள் பொருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். எலக்ட்ரோ ஆப்டிக் சென்சார் கேமிராக்கள், ரேடார்கள் உள்ளிட்டவைகள் மூலம் எல்லையோர பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary:
About 200 terrorist attacks in Jammu and Kashmir barley is ready., Said the central government.