ஆந்திராவில் செம்மர வழக்கில் கைதான 9 பேர் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், 22-பேர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
செம்மரம் கடத்தியதாக, தமிழகத்தை சேர்ந்த 32-பேர் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சித்தூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 9-பேர் கடந்த 12-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற 22-பேரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து திருப்பதி 5-வது அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மொத்தமுள்ள 32 பேரில், 31-பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், பொன்ராஜ் என்பவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதால், அவர் மட்டும் விடுவிக்கப்படவில்லை.
தாங்கள் எந்த தவறும் செய்யாத நிலையில், கோவிலுக்கு வந்த வழியில் கைது செய்யப்பட்டதாக விடுதலையானவர்கள் தெரிவித்தனர்.
English Summary:
9 people have already been arrested in the case in Andhra cemmara being released on bail, while 22 others were released from prison today.