ஏழை, எளிய மக்களுக்கான, 'ஜன்தன்' வங்கிக் கணக்குகளில், கறுப்புப் பணம் அதிக அளவில், 'டிபாசிட்' செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அத்தகைய, 23 கோடி வங்கி கணக்கு களை, மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளது.
கிராமப்புறங்களில் வங்கிக் கணக்கு இல்லாத வர்கள், அரசின் மானிய உதவிகள், கடன் திட்டங்களை பெறுவதற்கு வசதியாக, 'ஜன்தன்' என்னும் வங்கிக் கணக்கு திட்டத்தை, மத்திய
அரசு அறிமுகம் செய்தது.இதில்,நாடு முழுவதும், 23 கோடி பேர் வங்கிக் கணக்கு துவக்கியுள்ளனர்.
கடந்த, 8ம் தேதி நள்ளிரவு முதல்,பழைய,500,1,000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என,அறிவிக்கப்பட் டது. இதனால், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள், ஏழை மக்களுக்கு ஆசைவார்த்தை கூறி, கமிஷன் தந்து, அவர்களது, 'ஜன்தன்' வங்கி கணக்கில், பணத்தை, 'டிபாசிட்' செய்கின்றனர்.
இந்த பணத்தை சில காலம் கழித்து, திரும்ப பெறு வதே அவர்கள் எண்ணம். 'ஜன்தன்' வங்கி கணக்கு களில், திடீரென சில நாட்களாக முதலீடு அபரிமித மாக குவியதுவங்கியது. தடுக்க முடியாத தால், அது பற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு, வங்கிகள் கொண்டு சென்றன.
இதையடுத்து, 'ஜன்தன் வங்கிக் கணக்குகளில், அதிக பட்சம், 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும்' என, மத்திய அரசு உச்சவரம்பு
நிர்ணயித்துள்ளது. மேலும், 50 ஆயிரம் ரூபாய் க்கு மேல், 'டிபாசிட்' செய்ய விரும்பு வோரிடம், பணத்திற்கான ஆதாரங்கள் கேட்கப்படும். இதன் காரணமாக, 23 கோடி, 'ஜன்தன்' வங்கிக் கணக்கு களும், அரசின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.