புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மத்திய அரசு உறுதி:
கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் கடந்த 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிராக பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் பார்லிமென்டில் எந்த அலுவல்களும் நடக்காமல் முடங்கியுள்ளது. பார்லிமென்ட் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றதை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு உறுதி படத்தெரிவித்துள்ளது.
ஆலோசனை:
இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தினார்கள். காங்கிரஸ், இடதுசாரி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் இந்த ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து வரும் 23ம் தேதி பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்துவது எனவும், காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தர்ணா:
இந்நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில், ராஜ்யசபாவில் பிரதமர் பேச மாட்டார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தால் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தான் பதிலளித்து பேசுவார் எனவும் தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் மோசமான முறையில் விமர்சித்து பேசியுள்ளது அரசுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary:
The opposition parties have decided to hold a protest outside Parliament House.