ஆறு ஆண்டுகளுக்கு பின், சென்னையில், அதிரடியாக, ஒரு சவரன் தங்கம் விலை, 24 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சென்னையில், 2012 நவ., 24ல், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம் தங்கம், 3,060 ரூபாய்; ஒரு சவரன், 24 ஆயிரத்து, 480 ரூபாய்க்கு விற்பனையானது. அதே ஆண்டு, நவ., 26ல், ஒரு கிராம், 3,068 ரூபாய்க்கும்; ஒரு சவரன், 24 ஆயிரத்து, 544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே, இதுவரை தங்கம் அதிக விலைக்கு விற்பனையானதாகும்.
கால அவகாசம் : சர்வதேச நிலவரங்களால், பின், தங்கம் விலை, 24 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விற்பனையானது. சென்னையில், நேற்று முன்தினம், ஒரு கிராம் தங்கம், 2,878 ரூபாய்; ஒரு சவரன், 23 ஆயிரத்து, 24 ரூபாய்க்கு விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 31 ஆயிரத்து, 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மத்திய அரசு, தற்போது புழக்கத்தில் உள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்துள்ளது. அவற்றை, வங்கிகளில் மாற்றி கொள்ள, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள், தங்களிடம் உள்ள ரொக்கத்தை பயன்படுத்தி, தங்க நகைகளை வாங்க துவங்கினர். இதனால், ஆறு ஆண்டுகளுக்கு பின், நேற்று, ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 182 ரூபாய் உயர்ந்து, 3,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,456 ரூபாய் அதிகரித்து, 24 ஆயிரத்து, 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல், 10 கிராம் சுத்த தங்கம், 880 ரூபாய் உயர்ந்து, 31 ஆயிரத்து, 660 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 47.70 ரூபாய்; ஒரு கிலோ பார் வெள்ளி, 44 ஆயிரத்து, 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மாற்றம் : சென்னை உள்ளிட்ட பல நகை கடைகளில், நேற்று காலை முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. மாறாக, 'கிரெடிட், டெபிட் கார்டு' மற்றும் காசோலை மட்டும் வாங்கப்பட்டன. இதனால், பிற்பகலுக்கு மேல் நகை கடைகள், வெறிச்சோடி காணப்பட்டன.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இது, உலக பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் பலரும், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனுடன், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையும் சேர்ந்ததால், தங்கம் விலை உயர்ந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.