கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 11 டி.எம்.சி., நீரை, இரண்டு தவணைகளில், ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
கண்டலேறு அணை யில் இருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயின்ட்' வரை, 152 கி.மீ., சாய்கங்கை கால் வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு, நீர் வழங்கும் காலம், ஜூலையில் துவங்கியும், நீரை திறக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில், நீர் இருப்பு சரிந்ததால், சென்னையில், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவானது.
நிலைமையை உணர்ந்த அரசு, கிருஷ்ணா நீர் திறக்கும்படி, கடிதம் எழுதியது. இதை ஏற்ற ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து,
அக்., 10ல், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது. இந்த நீர், அக்., 18ல், தமிழக எல்லையை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற, ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுக்கு, திருப்பதி லட்டு பிரசாதம் கொடுத்தனர். கால்வாயின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்க, பராமரிப்பு நிதியை, ஆந்திராகோரியது.
இதை ஏற்று, சமீபத்தில், 25 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியது. இதை பெற்ற ஆந்திர அரசு, அடுத்த சில நாட்களிலேயே, நீர் திறப்பை திடீரென நிறுத்தியுள்ளது. 2 டி.எம்.சி., தருவதாக கூறிய ஆந்திர அரசு, 0.33 டி.எம்.சி., நீரை மட்டுமே தந்துள்ளது.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'கொடுத்த பணமும் போச்சு; தேவையான நீரும் கிடைக்கலை; அல்வாவுக்கு பதிலா, திருப்பதி லட்டை கொடுத்து, இப்படி ஏமாத்திட்டாங்களே...' என, புலம்பி வருகின்றனர்.
நீர் நிறுத்தம் ஏன்? ஆந்திரா விளக்கம்:
கிருஷ்ணா நீர் நிறுத்தம் குறித்து, ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கண்டலேறு அணையில், நீர் இருப்பு குறைவாக உள்ளது. சித்துார், நெல்லுார் மாவட்ட விவசாயிகள், கிருஷ்ணா நீரை பயன்படுத்தி,இரண்டாம் போக சாகுபடிக்கு ஆர்வம் காட்டுகின்றனர். சாய் கங்கை கால்வாயில் இருந்து, திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், பம்பிங் செய்து, நீர் நிரப்பப் பட்டுள்ளது.
இந்த நீரை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் கால்வாயில், நீர் திருட்டில் ஈடு பட்டனர். பருவமழை குறைந்து சாகுபடி தீவிரம் அடைந்தால், நீர் திருட்டு அதிகரிக்கும். கண்டலேறு அணையில் இருக்கும் குறைந்த நீரையும், பாசனத்திற்கு திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். விவசாயிகளிடம் சாகுபடி ஆர்வத்தை குறைக்க, கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.