காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலில் 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு :
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள பக்கிர் மசூதியில் இன்று பகல் 12.30 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 25-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary:
The deadly blast in a mosque in the city of Kabul, Afghanistan, 25 people have died in the attack. Many people were also injured.