ஆப்கன் தலைநகர் காபூலிலுள்ள ஷியா முஸ்லிம் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
பக்கிர் உல் ஒலும் மசூதியில் நடந்த இந்த தாக்குதலால் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
மசூதிக்கு உள்ளே நடந்து வந்த தற்கொலை தாக்குதல்தாரி, கட்டடத்திற்குள்ளே வைத்து குண்டை வெடிக்க செய்ததாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த தாக்குதலை நடத்தியதற்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் மற்றும் இராக் நாடுகளில் காணப்படும் வகுப்புவாத வன்முறை போல ஆப்கானிஸ்தானில் பெருமளவு இல்லை.
ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள்.
கடந்த ஜூலை மாதம் ஷியா முஸ்லிம்கள் காபூலில் நடத்தியதொரு போராட்டத்தில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் நடத்தியதாக உரிமை கோரப்பட்ட தாக்குதலில், 80 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary:
The Shiite Muslim mosque in the Afghan capital Kabul, a suicide bomb attack that killed at least 27 people, police say.