ஆப்கானின் வட பகுதி நகரான மஸார் -இ- ஷரிஃபில் இருக்கும் ஜெர்மனி துணை தூதரகத்தில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதல் ஒன்றில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் காயமடைந்த 80 பேருக்கும் மேலானோர் மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
வெடி பொருட்களால் நிரப்பப்பட்ட குறைந்தது ஒரு கார், சுற்றுச்சுவரில் மோத வைக்கப்பட்டு நடத்திய தாக்குதலால் பெரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அந்நகரத்தில் இரக்கும் நேட்டோ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பலமுறை துப்பாக்கிக்சூடும் நடைபெற்றுள்ளது.
ஜெர்மனியின் தலைமையில் இந்நகருக்கு வெளியே ஒரு நேட்டோ படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றிருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரான மஸாரில் உள்ள இலக்குகளை இந்த குழு இதற்கு முன்னரும் தாக்கியுள்ளது.
தலிபான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பு |
வெடி பொருட்களால் நிரப்பப்பட்ட குறைந்தது ஒரு கார், சுற்றுச்சுவரில் மோத வைக்கப்பட்டு நடத்திய தாக்குதலால் பெரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அந்நகரத்தில் இரக்கும் நேட்டோ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பலமுறை துப்பாக்கிக்சூடும் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலால் அருகிலுள்ள தெருக்களில் பெரும் சேதம் |