போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் மேஜிக் காளான். |
கேரள மாநிலம் ஆலப்புழா வைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேர் கொடைக்கானலுக்கு 2 தினங் களுக்கு முன்பு சுற்றுலா வந்துள் ளனர். அவர்கள் வட்டக்கானல் செல்லும் பகுதியில் அறை எடுத்து தங்கினர். இவர்கள், தடை செய் யப்பட்ட போதை காளானை பயன் படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிர் அதிகமாக இருந்த தால் இரவில் புகைமூட்டம் போட்டு தூங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலையில் பார்த்தபோது மாணவர்கள் தாமஸ்(21), ஜிபின்(25) ஆகியோர் இறந்து கிடந்தனர். அனில்(21), மெல் வின்(21), பினு(21) ஆகியோர் ஆபத்தான நிலையில் இருந்துள் ளனர். மற்ற மாணவர்களும் மயக்கத்தில் இருந்துள்ளனர்.
இதைப் பார்த்த விடுதி ஊழி யர்கள், கொடைக்கானல் போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்த னர். விரைந்து வந்த போலீ ஸார், மாணவர்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர், தேனி மாவட்டம் க.விலக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மூச்சுத் திணறல்
போலீஸார் கூறும்போது, “கேரள மாணவர்கள் தங்கியிருந்த அறையில் குளிரை தாங்க புகை மூட்டம் போட்டுள்ளனர். அறை அடைக்கப்பட்டிருந்ததால் அதிக அளவில் வெளியேறிய புகை மூச்சுத் திணறலை ஏற்படுத் தியுள்ளது. மாணவர்கள் போதை யில் இருந்ததால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இத னால் 2 பேர் மூச்சுத் திணறி இறந் திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது” என்றனர்.
இந்நிலையில், வட்டக்கானல் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கிச் சென்ற தகவல் தெரிய வந்ததால், தேசிய புலனாய்வுப் பிரிவினர் கொடைக்கானலில் விசாரணை நடத்திவிட்டுச் சென்ற னர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, வட்டக்கானல் பகுதி யில் சோதனைச் சாவடி அமைத் தது. இருந்தபோதும், போதைக்கு அடிமையானவர்கள் வட்டக்கானல் பகுதிக்கு வந்துசெல்வது தொடர்ந்துகொண்டு உள்ளது.
அறை அடைக்கப்பட்டு இருந்ததால் புகை மூச்சுத் திணறலை ஏற்படுத்தியுள்ளது.