சென்னை: தஞ்சை, அரவக்குறி்ச்சி தொகுதிகளில் நவ.,19ல் நடக்க உள்ள தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதிக் அலி என்பவர் கூடுதல் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ய மறுத்து விட்டது. சாதிக் அலியின் கூடுதல் மனுவை தள்ளுபடி செய்தது. எனினும், மே மாதம் இந்த தொகுதிகளில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.