புதுடில்லி: குடும்ப வன்முறை சட்டத்தில் கைது செய்யப்பட்ட, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மருமகன், இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
கைது:
காங்., மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித், டில்லி மாநில முதல்வராக, தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்துள்ளார். அடுத்தாண்டு துவக்கத்தில், உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., சார்பாக முதல்வர் வேட்பாளராக, ஷீலா அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரது மகள் லதிகா, தன் கணவர் சையது முகமது இம்ரான், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தன் சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பதாகவும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நேற்று ஆஜர்படுத்தினர்.
போலீஸ் காவல்:
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பங்கஜ் சர்மா, ஷீலா தீட்ஷித் மருமகன் இம்ரானை, இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். லதிகா - இம்ரான் திருமணம், 1996ல் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, 10 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.