தூத்துக்குடியில் சிலிண்டர் லாரி ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் காரணமாக தென் மாவட்டங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி புறவழிச்சாலை சிப்காட் வளாகத்தில் பாரத் பெட்ரொலியம் நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் சிலிண்டர் வாயு நிரப்பும் மையம் உள்ளது.
இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 தென்மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கும் கேஸ் நிரப்பட்ட சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் வளாகத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என நேற்று மதியம் முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2வது நாளாக லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால், 6 தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம் பகுதியிலும் சிலிண்டர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி ஓட்டுனர்களுடன் பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English summary:
Cylinder truck drivers strike in Tuticorin on 2nd day of work involved. In the southern districts struggle there is the risk of shortage of cooking gas cylinder.