சென்னை,
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதினர்.
கடந்த 11-ந்தேதி முதல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஏ.டி.எம். மையங்கள் ஓரிரு இடங்களில் மட்டுமே செயல்படுகின்றன. ஏ.டி.எம். மையங்களில் 100 ரூபாய் மட்டுமே வைக்கப் படுகிறது. ஒரு தடவை ரூ.2 லட்சம் மட்டுமே பணம் வைக்கப்படுகிறது. புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் வங்கிகளில் வழங்கப்பட்ட போதும், ஏடி.எம்களில் கிடைக்கப்பெறவில்லை.
ஏடி.எம் இயந்திரங்களின் மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியிருப்பதால், ரூ.100 தாள்கள் மட்டுமே வழங்கப்படுவதாக வங்கிகள் கூறியிருந்தது. ஏடி.எம்களில் மென்பொருளை மாற்றி 2 ஆயிரம் , 500 தாள்கள் கிடைப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை வங்கி ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இன்று முதல் சென்னை ஏ.டி.எம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க தொடங்கின. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் கிடைத்ததால் மக்கள் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர்.