சென்னை : குரூப்-2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் 21-ம் தேதி முதல் தொடங்கும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2-வில் அடங்கிய 2014-2015 மற்றும் 2015-2016 நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இதற்கான கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே உள்ள பிரேசர் பாலச்சாலையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 21-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை (26.11.2016 மற்றும் 27.11.2016 நீங்கலாக) நடைபெறுகிறது.
கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary: The Consultative Group -2 workplace Employee Recruitment The Government has announced that starting from April 21.