தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த், காரைக்காலை சேர்ந்த பாலமுருகன் உட்பட 9 பேர் கடந்த 13 ம் தேதி காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை அருகே அவர்களை வழி மறித்த இலங்கை கடற்படையினர், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அரவிந்த் மற்றும் பாலமுருகன் இருவரும் படுகாயமடைந்தனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காயமடைந்த மீனவர்கள் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த 2 மீனவர்களை, தமிழக அமைச்சர்கள் சிவி சண்முகம், எம்சி சம்பத் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.