தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று தொகுதிகளிலும் தற்போது வரை 13 கோடியே 69 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தற்போது வரை 13 கோடியே 69 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில் அரவக்குறிச்சி தொகுதியில் 45 லட்ச ரூபாயும், தஞ்சை தொகுதியில் 9கோடியே14 லட்ச ரூபாயும்,திருப்பரங்குன்றம் தொகுதியில் 4 கோடியே 9 லட்சரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கூடுதலாக இரண்டு சிறப்பு பார்வையாளர்கள் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.