மத்திய அரசு செல்லாது என அறிவித்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகும் மாற்றிக் கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் வங்கிகள் மீது நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதையடுத்து அவற்றுக்கு மாற்றாக சட்டப்படி செல்லுபடியாகும் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டியுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைக்க, அனைத்து வங்கிக் கிளைகள், ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் கூடுதல் நேரம் செயல்பட்டு பெருமளவில் திரண்ட பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்து வருகின்றன.
வங்கிகளும் ரிசர்வ் வங்கி அலுவலகங் களும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களிலும் செயல்பட்டன. பொதுமக்கள் பணம் செலுத்த ரூ பே கார்டுகள், ப்ரீபெய்டு கார்டுகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், மொபைல் பேங்கிங், இணையதளம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அத்துடன் ஜன்தன் யோஜனா கணக்குகள், அதன் அட்டைகளையும் பயன்படுத்தலாம்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப செலுத்தும் திட்டம் டிசம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பிறகும் சில குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும். எனவே, பொதுமக்கள் வங்கிகள் மீது நெருக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.