புதுடில்லி: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை அரசு வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, பொது மக்களிடம் இது தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த சந்தேகங்கள் குறித்து ரிசர்வ் பாங்க் அளித்துள்ள விளக்கம் வருமாறு:இந்த திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது?இந்தியாவில் உயர் மதிப்பிலான கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து விட்டது. சாதாரண மக்களுக்கு நல்ல நோட்டுக்கும் கரன்சி நோட்டுக்கும் வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லை. இத்தகைய கள்ள நோட்டுகள் தேச விரோத செயல்களுக்கும் சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. உயர் மதிப்பு நோட்டுகள் தேச விரோத சக்திகளால் தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தன; கறுப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கும் பயன்பட்டு வந்தன. பணப்புழக்கத்தை அடிப்படையாக கொண்டது இந்திய பொருளாதாரம். இதனால் கள்ள நோட்டுகள் பெரிய தலைவலியாக இருந்தன. கள்ள நோட்டு மற்றும் கறுப்பு பணத்தைக் கட்டுப்படுத்தவே 500 ரூபாய், 1000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.
இந்த திட்டத்தின் விவரம் என்ன?
இந்த திட்டத்தின்படி 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாஸ் பெறப்பட்டுள்ளன. இதனால் இந்த ரூபாய் நோட்டுகளை இனி பொருட்களை வாங்கவோ, சேமித்து வைக்கவோ பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில் இந்த வாபஸ் பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் பாங்கின் 19 அலுவலகங்கள், பாங்குகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம். எவ்வளவு பணம் கிடைக்கும்?நீங்கள் கொடுக்கும் மதிப்பிற்கு உரிய புதிய நோட்டுகளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.அனைத்தையும் பணமாக பெற்றுக் கொள்ள முடியுமா?இப்போதைக்கு ஒருவர் 4 ஆயிரம் ரூபாய் வரை பணமாக பெற்றுக் கொள்ளலாம். மீதம் உள்ள தொகையை, அது எவ்வளவாக இருந்தாலும் உங்கள் பாங்க் கணக்கில் செலுத்தி பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.என்னிடம் உள்ள நோட்டுகளைக் கொடுத்த பிறகு, எனக்கு ஏன் முழு பணமும் திருப்பிக் கொடுப்பதில்லை?உயர் மதிப்பு நோட்டுகளை வாபஸ் பெற்றதற்கான நோக்கத்தின் கீழ் அவ்வாறு முழு அளவுக்கு பணமாக வழங்க இயலாது.4 ஆயிரம் ரூபாய் என்னுடைய தேவைக்கு போதுமானதல்ல; நான் என்ன செய்வது?நீங்கள் மீதமுள்ள நோட்டுகளை உங்கள் கணக்கில் செலுத்தி விட்டு, செக், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு அல்லது இதர மின்னணு பரிவர்த்தனை மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாங்க் கணக்கு இல்லை என்றால் என்ன செய்வது?
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பாங்குகளில் தேவையான ஆவணங்களைக் கொடுத்து கணக்கைத் துவக்கி வைத்துக் கொள்ளலாம்.என்னிடம் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழான கணக்கு மட்டுமே உள்ளது. நான் என்ன செய்வது?நீங்களும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குட்பட்டு பண மாற்ற வசதிகளைப் பெறலாம்.நோட்டுகளை மாற்ற நான் எங்கே செல்வது?ரிசர்வ் பாங்க் கிளைகள், அனைத்து பாங்குகள், தபால் நிலையங்களில் இந்த மாற்றும் வசதி உள்ளது.என்னுடைய பாங்க் கிளைக்குதான செல்ல வேண்டுமா?4 ஆயிரம் ரூபாய் வரை எந்த பாங்க் கிளையிலும் உரிய அடையாள அட்டையைக் காட்டி மாற்றிக் கொள்ளலாம். 4 ஆயிரத்துக்கு மேல் உங்கள் பாங்க் கணக்கில் வரவு வைத்து பின்னர் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் கணக்கு வைக்காத பாங்க் கிளைக்குச் சென்றால் உரிய அடையாள அட்டை மற்றும் கணக்கு வைத்திருக்கும் பாங்க் விவரங்களைத் தெரவித்து, மின்னணு பரிமாற்ற முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
கணக்கு இல்லையென்றால்...?
எனக்கு கணக்கு இல்லை; என்னுடைய உறவினர் அல்லது நண்பரின் கணக்கின் மூலம் பணத்தை மாற்றிக் கொள்ளலாமா?உங்கள் உறவினர் அல்லது நண்பர் எழுத்து மூலம் இதற்கு சம்மதம் தெரிவித்தால் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றச் செல்லும்போது, அந்த அனுமதிக்கான சான்று மற்றும் உங்களுடைய அடையாள அட்டையைக் கொடுக்க வேண்டும்.நான் நேரிலேயே பாங்கிற்கு செல் வேண்டுமா?நேரில் செல்வது நல்லது. அவ்வாறு செல்ல இயலா விட்டால் நீங்கள் அனுப்பும் நபர், அவருக்கு உரிய அதிகாரம் கொடுக்கும் கடிதம் மற்றும் அவருடைய அடையாள ஆவணத்தடன் செல்ல வேண்டும்.
ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியுமா?
ஏடிஎம் செயல்பட ஆரம்பித்த பிறகு நவம்பர் 18ம் தேதி வரை ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். 19ம் தேதியிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம்.செக் மூலம் பணம் எடுக்க முடியுமா?செக் அல்லது பணம் எடுப்பதறகான சீட்டு மூலம் 24 ம் தேதி வரை ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை எடுக்கலாம். ஆனால் வாரத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேல் எடுக்க இயலாது. பணம் செலுத்துவதற்கான இயந்திரங்கள் மூலம் பணம் செலுத்தலாமா?வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளை செலுத்தலாம்.இந்த பரிமாற்றத்ததை எது வரை செய்ய முடியும்?டிசம்பர் 30ம் தேதி வரை இவ்வாறு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு பிறகு ரிசர்வ் பாங்க் நிர்ணயிக்கும் மையங்களில் உரிய ஆவணங்களைக் காட்டி மாற்றிக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் இருந்தால்...
நான் இப்போது இந்தியாவில் இல்லை; என்ன செய்வது?வாபஸ் பெறப்பட்ட நோட்டுகள் இந்தியாவில் இருந்தால், இந்தியாவில் உள்ள ஒருவருக்கு எழுத்து மூலம் அதிகாரம் கொடுத்து அவர் மூலம் பணத்தை மாற்றி க் கொள்ளலாம்.வெளிநாடு வாழ் இந்தியர் எப்படி மாற்றுவது?உங்களுடைய நான் ரெசிடன்ட் கணக்கு மூலம் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.வெளிநாட்டு சுற்றுலாவாசி எப்படி மாற்றுவது?வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளை வாங்கியதற்கான ஆவணங்களைக் காட்டி விமான நிலையங்களில் 5 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம்.மருத்துவச் செலவு, சுற்றுலா .போன்றவற்றுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?நீங்கள் வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளைப் பயன்படுத்தி 11ம் தேதி வரை அரசு மருத்துவ மனைகள், அரசு போக்குவரத்து, ரயில் மற்றும் விமான சேவைகளைப் பெறலாம்.
அடையாள ஆவணங்கள் என்னென்ன?
ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, அரசுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டைமேலும் தகவல்கள் பெற: www.rbi.org.in022 - 22602201/022 - 22602944