அலெப்போ:
சிரியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரை கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாததால் அலெப்போ நகரைக் காப்பாற்ற அரசுப்படைகள் உள்ளே நுழைந்துள்ளன.
இந்நிலையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 30 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போருக்கு இதுவரை சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary: Russian aerial attack kills 30 militants in Syria