மதுரை;மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் 30 ஆயிரம் ஓட்டுக்கள் எங்கே போயின' என அரசியல் கட்சியினர் அதிர்ச்சி
அடைந்தனர்.இத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்த்த அரசியல் கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஒரு கட்சி சார்பில் ஓட்டுக்கு முதற்கட்டமாக இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. தேர்தலுக்கு முதல் நாள் இரவும் இரண்டாயிரம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது. மற்றொரு கட்சி சார்பிலும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதனால், பொதுத் தேர்தலை விட ஓட்டுப்பதிவு அதிகமாகும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், பொதுத் தேர்தலில் 1,97,600 ஓட்டுக்கள் (70.82 சதவீதம்) பதிவாகிய நிலையில், தற்போது 2,03,057 ஓட்டுக்கள் (71 சதவீதம்) பதிவாகியுள்ளன.
இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:வாக்காளர் பட்டியலை வைத்து வார்டு வாரியாக ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒரு 'பொறுப்பாளர்' நியமிக்கப்பட்டு 'தேர்தல் பணியில்' ஈடுபட்டோம். பணம் பட்டுவாடா செய்வதற்காக சென்ற பல வீடுகளில், வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்கள் இல்லை. அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு ஓட்டு இல்லை என தெரிந்தது.
குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் இருந்து தொலைதுார கிராமங்களில் இப்பிரச்னை அதிகம்.எங்கள் கணிப்புப்படி 30 வாக்காளர்களை நாங்கள் சந்திக்க முடியவில்லை. அவர்கள் ஓட்டு இங்கு உள்ளது; ஆட்கள் இல்லை. பலர் வெளியூருக்கு மாறி சென்று விட்டதாக தெரிகிறது. வாங்கிய பணத்திற்கு ஓட்டு அளித்து விட்டனர். பதிவாகாத ஓட்டுக்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்ட தால், ஓட்டுப்பதிவு குறைந்தது போல் உள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தி பெயர்களை நீக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
English Summary:
Where 30 thousand votes went in Madurai Thiruparankundram module that shocked by the political parties .In this district 71 percent of the votes recorded in the election. Expected to increase the percentage of the vote to the chagrin of the political parties.