பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 3,450 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட
சாதத்தால், அன்னா பிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் உடையது. இங்கு, ஆண்டு தோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில், அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டுக்கான அன்னாபிஷேம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கணக்க விநாய கருக்கு மகாபிஷேகமும்; 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவ கிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று, 75 கிலோ அளவுள்ள, 46 மூட்டை, 3,450 கிலோ பச்சரிசியால் சாதம் சமைத்து, காலை, 11:00 முதல் மாலை, 4:15 மணி வரை, பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், 6 மணியளவில் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னா பிரசாதத்துக்காக தயாரிக்கப்பட்டு லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட சாதத்தில், 70 சதவீதம் மக்களுக்கும்; 20 சதவீதம் கால்நடைகளுக்கும், 10 சதவீதம் மீன்களுக்கும் வழங்கப்பட்டது.
பிரகதீஸ்வரருக்கு 600 கிலோ அரிசி : தஞ்சை பெரியகோவிலில், பிரகதீஸ்வரர் திருமேனிக்கு, 600 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம், 300 கிலோ எடை காய்கறி மற்றும் இனிப்பு வகையால் படைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, அன்னாபிஷேகம் செய்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.