நாமக்கல்லில் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறியதாக 3 ஸ்கேன் சென்டர்களுக்கு சிறப்பு மருத்துவக் குழு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அறிந்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், இங்குள்ள ஸ்கேன் சென்டர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் சில ஸ்கேன் சென்டர்களில் பெண்ணின் கருவில் உள்ளது குழந்தை ஆணா? பெண்ணா ? என கண்டறிந்து கூறியது தெரியவந்தது.
இதனையடுத்து மாநில சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி கமலக்கண்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர், பல்வேறு ஸ்கேன் சென்டர்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் 3 முக்கிய ஸ்கேன் சென்டர்களில் கருவில் உள்ள சிசு குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு கூறி வந்தது ஆதாரத்துடன் தெரியவந்தது.
இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஸ்கேன் சென்டர்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். ((இந்த சோதனை, மாவட்டம் முழுவதும் தொடரும் என்றும், தவறு செய்யும் ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
English Summary:
Namakkal infant boy in the womb? A girl? 3 Scan centers and special medical team as saying that authorities traced and sealed.