ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில முக்கிய சந்தை நகரமான நர்வால் குடிசைப் பகுதியில் அதிகாலை ஏற்ப்பட்ட தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில ஜம்மு மாவட்டத்தின் நர்வால் என்ற பகுதி ஆப்பிள் உள்ளிட்ட பழவகைகள், கேரட் போன்ற காய்கறிகளுக்கான மொத்த விற்பனைச் சந்தைக்கு பிரசித்தி பெற்ற இடமாகும்.
இங்கு பல குடிசைப் பகுதிகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு குடிசைப் பகுதியில் உள்ள ஒருவீட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீப்பிழம்புகள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் வேகமாக பரவியது. இதில் 80-க்கும் அதிகமான குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த கோரவிபத்தில் சிக்கிய 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த விபத்து பாதிப்பு குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
English summary:
Srinagar: Today morning 3 killed in fire broke out in Narwal slums near jammu district the state of jammu and Kashmir