அமெரிக்காவில் 3-வது நாளாக நேற்றுமுன்தினம் இரவும் கலவரம் நீடித்தது. போர்ட்லேண்ட் நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த நாடு முழுவதும் பொதுமக்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாள் மாலை, இரவில் முக்கிய நகரங்களின் சாலைகளில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் 3-வது நாளாக வெள்ளிக்கிழமை இரவும் நியூ யார்க், மியாமி, அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, போர்ட்லேண்ட் உட்பட நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற னர். வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போர்ட்லேண்ட் நகரில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலைகளில் திரண்டு 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர் களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆனாலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து செல்ல வில்லை. அப்போது கூட்டத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரி யாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். அந்த நபர் முகமூடி அணிந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
கடந்த புதன்கிழமை சியாட்டில் நகரில் நடந்த பேரணியின்போதும் மர்ம நபர் சுட்டு 5 பேர் காயமடைந்தனர். ட்ர்ம்ப் எதிர்ப்பு பேரணிகளில் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்துவதும் துப்பாக்கியால் சுடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அமெரிக்க போலீஸாருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
கையெழுத்து இயக்கம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் உள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் ட்ரம்புக்கு 290-ம் ஹிலாரிக்கு 228-ம் கிடைத்துள்ளது. இந்த தேர்வாளர்கள் விரைவில் ஒன்றுகூடி ட்ரம்பை முறைப்படி அதிபராக தேர்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில் தேர்வாளர்கள் ஹிலாரிக்கு ஆதரவாக வாக் களிக்க வேண்டும் என்று கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக Change.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டு ஆதரவு கோரப் பட்டுள்ளது. இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்ரம்புக்கு எதிராகவும் ஹிலாரியை ஆதரித்தும் வாக்களித்துள்ளனர்.
ஆட்சி மாற்ற நடவடிக்கை
தற்போதைய அதிபர் ஒபாமா விடம் இருந்து புதிய அதிபர் ட்ரம்புக்கு சுமுகமாக ஆட்சி நிர்வாகத்தை மாற்ற மூத்த அதி காரிகள் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர். அமெரிக் காவின் துணை அதிபராக பொறுப் பேற்க உள்ள மைக் பென்ஸ், ஆட்சி மாற்ற நடவடிக்கையில் ட்ரம்ப் அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.