புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ஆகியோர் ரிசர்வ் வங்கி சென்று பணம் இருப்பு குறித்து விசாரித்தனர். பின்னர், மத்திய அரசு தனது நடவடிக்கைகளை திரும்ப பெற்றுக்கொள்ள 3 நாள் கெடு விதித்துள்ளனர்.
எதிர்ப்பு:
கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு நிதிஷ் தவிர மற்ற எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பார்லிமென்டிலும் இது எதிரொலித்தது. நேற்று மம்தா தலைமையில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டனர். திரிணமுல் காங்கிரஸ் கட்சி பார்லிமென்டில் ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
பேரணி:
இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் பேரணியாக ரிசர்வ் வங்கி சென்றனர். அங்கு இருவரும் ரிசர்வ் வங்கியி்ல் எவ்வளவு பணம் உள்ளது. சூழ்நிலை சுமுக நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை நாளாகும். எவ்வளவு பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களை கேட்டனர். இதனை கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
எச்சரிக்கை:
பின்னர் மம்தா பானர்ஜி கூறியதாவது: அரசியல் சட்டத்தை பிரதமர் மோடி உடைத்துள்ளார். இந்த திட்டத்தை அமல்படுத்தும் முன்னர் மத்திய அரசு ஏன் முறையாக செயல்படுத்தவில்லை. இந்த திட்டம் காரணமாக சாமான்ய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் மத்திய அரசுக்கு 3 நாள் கெடுவிதிக்கிறோம். அதற்குள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் உங்களை சும்மாவிட மாட்டோம். நாங்கள் இன்னும் உயிருடன் தான் உள்ளோம் என்றார்.
மோசடி:
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், மத்திய அரசு தனது முடிவை 3 நாளில் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். இல்லாவிட்டால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவார்கள். ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது, சுதந்திரத்திற்கு பிறகு நடந்த மிகப்பெரிய மோசடி ஆகும் என்றார்.