புது தில்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கெடு விதித்துள்ளனர்.
தில்லியில் உள்ள அசத்புர் மண்டி பகுதியில் நடந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசு அறிவித்த இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினை 3 நாட்களுக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் நாடு 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றுவிடும். இதுபோன்றதொரு அசாதாரண சூழ்நிலையை நெருக்கடிக் காலத்திலும் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
வங்கியின் வரிசையில் நிற்கும் மக்களுடன், பிரதமர் மோடியும் நின்று பார்த்தால்தான் மக்களின் வலி என்னவென்று புரியும் என்று தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்று ரிசர்வ் வங்கிக்கு எதிரே நடைபெற்ற போராட்டத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கலந்து கொண்டார். ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது ஜனநாயக இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல் என்று குற்றம்சாட்டிய கேஜ்ரிவால், மக்கள் தங்களது சேமிப்புகளை வங்கியில் செலுத்தி அதில் கிடைக்கும் ரூ.10 லட்சம் கோடியை, மோடி, தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு முதலீடாகக் கொடுத்துவிடுவார் என்றும் மோடியை தாக்கிப் பேசினார்.
இந்த அதிரடித் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்துக்குப் பிறகு, இரு தலைவர்களும் ஆர்பிஐ ஆளுநரை சந்தித்துப் பேசினர்.
Summary: 500 and 1000 banknotes, and they will not withdraw the notification deadline imposed by West Bengal Chief Minister Mamata Banerjee and Delhi Chief Minister Arvind Kejriwal.