சீனாவின் ஜியாங்ஷி மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) மின் ஆலை ஒன்றில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 40 பேர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் சீனாவின் ஜியாங்ஷி மாகாணத்தில் மின் ஆலை ஒன்றில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரும்புக் கம்பிகள் சரிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியிலிருந்த ஊழியர்கள் 40 பேர் பலியாகினர். இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில வருடங்களாகவே கட்டுமானத் துறையில் நடைபெறும் ஊழல் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருவதாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
At least 40 people were killed when part of a power station under construction in China collapsed on Thursday in the latest industrial accident in a country with a dismal safety record.