சென்னை : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆக்டோபசின் கரங்களைப் போன்று நீளும் தமிழக ஆட்சியாளர்களின் ஊழல் உழவுக் கருவிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. ஏர் உழுவதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பவர் டில்லர் எனப்படும் உழவுக் கருவிகள் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியுடன் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த கருவியின் மொத்தவிலையில் 40% மானியமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் சீன தயாரிப்பு பவர் டில்லர்களை வாங்குபவர்களுக்கு மட்டும் தான் மானியம் வழங்க வேண்டும் என்றும், இந்தியத் தயாரிப்பு டில்லர்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்றும் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு ஆணையிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீனத் தயாரிப்பு பவர் டில்லர்களின் அதிகபட்ச விலை முறையே ரூ.1.56 லட்சம், ரூ.1.61 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் சந்தை விலை ரூ.46,000 மட்டுமே. ஆனால், மானியவிலைத் திட்டத்தின் கீழ் இந்த டில்லர்கள் ரூ.1.61 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் உண்மையான மதிப்பை விட ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.15 லட்சம் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு பவர் டில்லருக்கும் ரூ.95,000 வீதம் மேலிடத்திற்கு தரப்படுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்திற்கு சராசரியாக 100 டில்லர்கள் வீதம் 3000 முதல் 4000 பவர் டில்லர்கள் வழங்கப்படவுள்ளன.
அந்தவகையில் சராசரியாக ஒரு பவர் டில்லருக்கு ரூ.1.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.44 கோடி உழவர்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதில் ரூ.38 கோடி கையூட்டாக கிடைக்கிறது. தரமான இந்தியத் தயாரிப்பு பவர் டில்லர்கள் கிடைக்கும் போது சீனத் தயாரிப்பை வாங்கும்படி அமைச்சர் கட்டாயப்படுத்துவது ஏன்? எனத் தெரியவில்லை. இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுனரும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை ஏற்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆணையிட வேண்டும். உழவர்களுக்கு இந்திய தயாரிப்பு டில்லர்களையே வழங்க வகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.