சென்னை : தமிழகம், புதுச்சேரியில் 4 தொகுதி தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளன.
4 தொகுதி தேர்தல் :
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி துவங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 19ம் தேதி பதிவாகும் ஓட்டுக்கள், நவம்பர் 22 ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பிரசாரம் ஓய்கிறது :
4 தொகுதி தேர்தலுக்கான பிரசாரம் நாளை (நவ.,17) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினரும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.