சென்னை: தமிழகத்தில் 3 தொகுதிகள், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் மாலை 5:00 மணியுடன் பிரச்சாரம் முடிந்தது.தமிழகத்தில், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில், பணப்பட்டுவாடா பிரச்னையால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் மரணமடைந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் காங்., - எம்.எல்.ஏ., ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நான்கு தொகுதிகளில் நவ.,19ல் தேர்தல் நடக்க உள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.
வெளியேற உத்தரவு:
நான்கு தொகுதிகளிலும் மாலை 5:00 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நெல்லித்தோப்பு தொகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. தஞ்சை, கரூர், மதுரை மாவட்டங்கள், புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நான்கு தொகுதிகளில் தங்கியுள்ள வெளியூர் ஆட்கள் உடனடியாக வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.