விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் முண்டியம்பாக்கம் என்ற இடத்தில் சர்க்கரை ஆலை உள்ளது. இதைஒட்டி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில், இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், ஒரு குழந்தை உட்பட, ஐந்து பேர் பலியாகினர்.
விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி பேருந்துகள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 'எங்கேயும் எப்போதும்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இன்று அதே போல ஒரு விபத்து முண்டியம்பாக்கம் அருகே நடந்துள்ளது.
இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
பேருந்துகள் மோதிய வேகத்தில் ஒருபேருந்து தலைகீழாக கவிழ்ந்து நொறுங்கியதில் ஏராளமானோருக்கு எலும்பு முறிந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

English summary :
Five persons, including one child, were killed, and 39 others injured, in road accident near Villupuram.