மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அந்தந்த மாநில ஆளுங்கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. கட்சி ரீதியில் பார்த்தால், பாஜக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை தலா 2 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ளன.
மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அண்மையில் காலியான மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, தாம்லுக் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸின் திப்யேந்து அதிகாரி, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளரை 4.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அமோக வெற்றி பெற்றார். கூச்பிகார் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் பார்த்தாபிரதிம் ராய், பாஜக வேட்பாளரை சுமார் 4.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மந்தேஸ்வர் பேரவைத் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் சைகாத் பாஞ்சா தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் உஸ்மான் கனி சர்க்காரை சுமார் 1.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
"மக்களின் புரட்சியே தேர்தல் முடிவு': இந்த இடைத் தேர்தல் முடிவு குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசினார். "அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிரான மக்களின் புரட்சியே இத்தேர்தல் முடிவாகும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி தவறிவிட்டார்' என்று மம்தா தெரிவித்தார்.
ம.பி., அஸ்ஸாம், அருணாசலத்தில் பாஜக வெற்றி: மத்தியப் பிரதேசத்தின் ஷாடோல் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஞான் சிங் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹிமாத்ரி சிங்கை தோற்கடித்தார். அதேபோல், அந்த மாநிலத்தில் உள்ள நேபாநகர் பேரவைத் தொகுதியில் பாஜகவின் மஞ்சு தாதூ காங்கிரஸ் வேட்பாளர் அந்தர் சிங் பர்தேவை வென்றார்.
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதான் பரூவா தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹேமபிரசங்கா பேகுவை சுமார் 1.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அந்த மாநிலத்தில் உள்ள பைதலாங்சோ பேரவைத் தொகுதியில் பாஜகவின் மான்சிங் ரோங்பி சுமார் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபோன்சிங் ரோங்காங்கை வென்றார்.
இது குறித்து அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் "இடைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியானது, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை மக்கள் முழுமையாக ஆதரிக்கின்றனர் என்பதையே காட்டுகிறது. இது பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு மக்கள் அளித்த தீர்ப்பாகும்' என்றார்.
அருணாசலப் பிரதேசத்தின் ஹயுலியாங் பேரவைத் தொகுதியில் மாநிலத்தில் ஆளும் வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வின் வேட்பாளர் தசாங்லு புல், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் யோம்பிக்ரியை 942 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் வெற்றி: மற்றொரு வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 பேரவைத் தொகுதிகளிலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது. பர்ஜாலா தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜுமு சர்க்கார், பாஜக வேட்பாளர் சிஷ்டாமோகன் தாûஸ தோற்கடித்தார். கோவாய் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பிஸ்வஜித் தத்தா, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட திரிணமூல் வேட்பாளர் மனோஜ் தாûஸ வென்றார்.
மக்களுக்கு நன்றி
மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜகவை வெற்றி பெறச் செய்ததற்காக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
பாஜக மீதும், வளர்ச்சி மற்றும் நல்ல நிர்வாகத்திலும் எங்கள் கட்சி கொண்டுள்ள நிலையான அக்கறையின் மீதும் தொடர்ந்து நம்பிக்கையை வெளிப்படுத்தி வரும் மக்களுக்கு நன்றி. மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சி நல்ல வெற்றியைப் பெற உறுதுணையாக இருந்த அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
அதேபோல், மேற்கு வங்கத்திலும் கணிசமான வாக்குகளைப் பெற்றதற்காக அந்த மாநில பாஜகவுக்கு எனது பாராட்டுகள். மேற்கு வங்க மக்களுக்குப் பணியாற்றுவதில் பாஜக உறுதிபூண்டுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.
English Summary : 5 state elections: victory for ruling parties.West Bengal, Madhya Pradesh, Tripura, Arunachal Pradesh, Assam Lok Sabha and assembly elections in 5 states have been successful in the respective state ruling party. In terms of the party, BJP, Trinamool Congress, the victorious parties each 2 seats.