நாசிக் :மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அச்சகத்தில் 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.500, 1,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நவ., 8 ம் தேதி அறிவித்ததை அடுத்து, நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்.,களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்களின் இந்த சிரமத்தை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‛மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கரன்சி நோட்டு அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் நோட்டுக்கள் நவ., 16ம் தேதி விநியோகத்திற்கு அனுப்பப்பட உள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒன்பது அச்சகங்களில் நாசிக் அச்சகமும் ஒன்று. இங்கு ரூ.20, 50, 100 நோட்டுக்களும் அதிக அளவில் அச்சிடப்பட்டு வருகிறது. அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ரூ.2,000 நோட்டுக்கள் மட்டுமே இதுவரை புழக்கத்திற்கு வந்துள்ளன. புதிய ரூ.500 நோட்டுக்களும் தங்குதடையின்றி கிடைப்பதற்காக அதிக அளவில் அச்சிடப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.