புதுடில்லி: பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதை, பார்லி.,யில் கூட்டாக சேர்ந்து எதிர்ப்பது குறித்து, டில்லியில் நேற்று, காங்., - திரிணமுல் காங்., கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர்.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பார்லி., குளிர்கால கூட்டத்தொடர், நாளை துவங்க உள்ளது. இந்த தொடரின்போது, ரூபாய் நோட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், அரசுக்கு எதிராக, காங்., தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக, டில்லியில் நேற்று, காங்., - திரிணமுல் காங்., மூத்த தலைவர்கள் கூடி விவாதித்தனர். காங்., சார்பில், லோக்சபா காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்யசபா காங்., தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர், லோக்சபா திரிணமுல் காங்., தலைவர் சுதிப் பந்தோபாத்யாயாவை சந்தித்து பேசினர். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக, காங்., துணைத் தலைவர் ராகுலுடன், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடனும், காங்., தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
யெச்சூரியுடன் மம்தா போனில் பேச்சு : அரசியல் களத்தில் பரம வைரியாக கருதப்படும் மார்க்., கம்யூ., கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மம்தா பேசினார். அப்போது, 'பழைய நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், மார்க்.கம்யூ., - திரிணமுல் காங்., சேர்ந்து செயல்பட வேண்டும்' என, மம்தா விருப்பம் தெரிவித்தார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று, நிருபர்களிடம் பேசிய, சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, மம்தா பானர்ஜி என்னுடன் தொலைபேசியில் பேசினார். பார்லிமென்ட் கூட்டம் நடக்கும்போது, யார், என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கும் முடிவு, பா.ஜ., தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.