கோல்கட்டா: 'மக்களை, பிரதமர் மோடி, பிச்சைக்காரர்களாக்கி விட்டார்' என, திரிணமுல் காங்., தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறினார்.மேற்குவங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.கோல்கட்டாவில், அவர் கூறியதாவது: நாட்டில் பல இடங்களில், முறையான வங்கி மற்றும் தபால் அலுவலக வசதிகள் இல்லை. அப்படியிருக்கையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அதிரடியாக அறிவித்ததன் மூலம், மக்களை ஒரே நாளில், பிரதமர் மோடி, பிச்சைக்காரர்களாக்கி விட்டார்.இந்த பிரச்னை தொடர்பாக, காங்., துணைத் தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட பல தலைவர்களிடம் பேசினேன். மேலும், என் கட்சியின், 40 எம்.பி.,க்களுடன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, இன்று சந்திக்க போகிறேன். மற்ற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். ரூபாய் நோட்டை மாற்றுபவர்களின் விரலில், மை வைக்கும் அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதில், அரசின் கையாலாகாத தனத்தை, இது காட்டுகிறது.இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Wednesday, 16 November 2016
Home »
India
,
indian politcis
» ரூ. 500, 1,000 செல்லாத விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்கிறார் மம்தா : பிரதமர் மோடி மீது கடும் தாக்கு