சென்னை: இந்தியன் வங்கியில், கடந்த சில நாட்களில், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த வங்கிகளில் புதிய ரூ.500 நோட்டு கிடைக்கும் எனவும் அந்த வங்கியின் அதிகாரி தெரிவித்தார்.
சென்னையில், இந்தியன் வங்கியின் பொது மேலாளர் மணிமாறன் கூறியதாவது:
ஏ.டி.எம்.,களில், முன்பு 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும், 100 ரூபாய் நோட்டுகளும் வைக்கப்பட்டன. அப்போது, 10 லட்சம் ரூபாய் அளவுக்கு ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டன.தற்போது, 100 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுவதால், 2 லட்சம் ரூபாய் அளவுக்கு தான் வைக்க முடிகிறது. புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளை வைக்கும் போது, 20 லட்சம் ரூபாய் அளவுக்கு கரன்சி நோட்டுகளை வைக்க முடியும். எங்கள் வங்கி கிளைகளில் விரைவில் புதிய ரூ.500 நோட்டு கிடைக்கும்.
இந்தியன் வங்கியில் சில நாட்களில், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் டெபாசிட் செய்துள்ளனர்.
இந்தியன் வங்கி மூலம், மொபைல் போன் ‛ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறிய கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் எளிதில் பொருட்களை வாங்கி பணம் செலுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.