சென்னை: தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டு எப்போது வரும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்படாதது குறித்து ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ‛தமிழகத்திற்கு எப்போது புதிய ரூ.500 நோட்டு வரும்' என, நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். அப்போது ரிசர்வ் வங்கி சார்பில், ‛பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விஷயம் என்பதால், புதிய ரூ.500 நோட்டு எப்போது வரும் என்று குறிப்பிட்டு கூற முடியாது' என, தெரிவிக்கப்பட்டது.
‛ உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நவ.,28 ம் தேதிக்கு நீதிபதி கிருபாகரன் ஒத்தி வைத்தார்.
English Summary:
When new 500 note to the State Supreme Court Justice Kirubakaran asked.