கோவை: ஸ்டேட் பாங்க் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதிகரிப்பு:
அப்போது அவர் கூறியதாவது: வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக புதிய வங்கிக்கணக்கை துவக்கி தங்களது பணத்தை டிபாசிட் செய்யலாம். கடனுக்கான வட்டி குறைப்பு தொடர்பாக இப்போது கூற முடியாது.வங்கிகளுக்கான முதலீட்டை பெருக்க ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதாக இப்போது கூற முடியாது.
சீராகும்:
500 ரூபாய் நோட்டுகள் எஸ.பி.ஐ வங்கிகளுக்கு வந்துள்ளது. சென்னையில் இன்று முதல் ரூ. 500 பணம் கிடைக்கும். கோவையில் விரைவில் கிடைக்கும். தகவல். டிஜிடல் பண பரிவர்த்தனை 300 சதவீதம் எண்ணிக்கை அடிப்படையிலும் , 200 சதவீதம் ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது. 841 நடமாடும் ஏ.டி.எம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பண விநியோகம் செய்யப்படுகிறது.
சுங்கசாவடிகளில் 3600 பி.ஓ.எஸ் எனப்படும் ஸ்வைப்பிங் மிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் 500 ரூபாய் நோட்டுக்கள் முழுமையாக புழக்கத்தில் வரும். அதன் பின்னர் பண தட்டுப்பாடு விரைவில் சரியாகும்.
நடவடிக்கை:
மக்கள் அச்சத்தில் 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடாமல் வைத்திருக்கின்றனர். வங்கி அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வங்கியில் வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள் நடந்து கொண்டு விதம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
English Summary:
Arundhati Bhattacharya, SBI Bank President met with journalists in Coimbatore.On either side of those who have an account, depositing their money immediately can start the new bank.