சென்னை: தமிழக நெடுஞ்சாலை துறை முதன்மை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில், 50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக நெடுஞ்சாலை துறையில், கட்டடம் மற்றும் பராமரிப்பு பிரிவில் முதன்மை பொறியாளராக பணியாற்றுபவர் ஜெயராமன். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், சாலை போடும் ஒப்பந்தம் வழங்க லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி, கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி, கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.